Home /News /entertainment /

அஜித் பற்றிய கேள்விக்கு அட்லீ சொன்ன அல்டிமேட் பதில்!

அஜித் பற்றிய கேள்விக்கு அட்லீ சொன்ன அல்டிமேட் பதில்!

இயக்குநர்  அட்லீ

இயக்குநர் அட்லீ

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    அஜித் பற்றிய கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார் இயக்குநர் அட்லீ.

    மெர்சல், தெறி படங்களை அடுத்து அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இத்திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.

    இந்நிலையில் #AskAtlee என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு இயக்குநர் அட்லீ ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் அஜித்தைப் பற்றி ஒருவார்த்தை கூறுங்கள் என்று அட்லீயிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "அஜித் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். சமீபத்தில் வெளியான விஸ்வாசம், நேர்கொண்டபார்வை ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.

    நாளை பிகிலுடன் கார்த்தியின் கைதி திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில், கைதி, மற்றும் தளபதி 64 படத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அட்லீ, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பணியை நேசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    வீடியோ பார்க்க: நூதனமாக எழுந்த புகார்கள்... சிறப்புக்காட்சி அரசியல்...! பிகில் சர்ச்சை

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Bigil, Director Atlee

    அடுத்த செய்தி