• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழகத்தில் பாஜக காலூன்ற விஜய் தடையாக இருப்பார் என்பதாலேயே ஐடி ரெய்டு...! இயக்குனர் அமீர் பேச்சு

தமிழகத்தில் பாஜக காலூன்ற விஜய் தடையாக இருப்பார் என்பதாலேயே ஐடி ரெய்டு...! இயக்குனர் அமீர் பேச்சு

இயக்குநர் அமீர் மற்றும் விஜய்

இயக்குநர் அமீர் மற்றும் விஜய்

  • News18
  • Last Updated :
  • Share this:
தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை பாதுகாப்பு வேளாண் மையமாக முதல்வர் அறிவித்த அறிவிப்பு  வரவேற்புக்குறியது. ஆனால், அதை நடைமுறைப்பட்டுத்த வேண்டும் என இயக்குநர் அமீர் கேட்டுக்கொண்டார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற விருது விழாவில் திரைப்பட இயக்குனர் அமீர் பங்கேற்று திரைப்பட கலைஞர்களுக்கு  விருதுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தஞ்சை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மையமாக அறிவித்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் இதனை அறிவித்தல் போதாது இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரிசோதனையை விமர்சனம் செய்யக்கூடாது, காழ்ப்புணர்ச்சி காரணமாகவும்,  அச்சுறுத்தலாகவும், இருக்கக்கூடாது. படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் போரட்டம் நடத்தியது கண்டியதக்கது. ஆனாலும் விஜய் பெருந்தன்மையாக நடந்துகொண்டார் அவர் நினைத்தால் ரசிகர்களை பாதுகாப்பிற்காக அழைத்ததிற்கலாம் என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் அமீர், தமிழ் நாட்டில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அதற்கு எதிராக நடிகர் விஜய் இருப்பாரோ என நினைத்திருக்கலாம். அதனாலான அழுத்தம் தான் இந்த வருமான வரி சோதனையாகவும் இருக்கலாம். இதுபோன்ற அச்சுறுத்தல்களால் விஜய் வளர்ச்சிதான் அடைவார், அவருக்கு பின்னடைவாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

ரஜினியை முன்னிலைப்படுத்த பாஜக பேச வைத்திருக்கும். போராட்டம் இன்னும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.
மாணவர்களை பற்றி அவர் என்ன நினைத்திருக்கிறார். மாணவர்கள் தான் நாளைய தலைமுறை அவர்கள் தவறாக பேசக்கூடாது. டெல்லி தாக்குதலுக்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் இது போன்று ரஜினி பேசக்கூடாது என்றும்,  மாணவர்களை முட்டாளாக நினைக்கவேண்டாம் என்றும் அமீர் தெரிவித்தார். மேலும், உதாரணமாக ஜல்லிக்கட்டு தமிழனாக விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Also Read: இன்றே ஆஜராக வருமான வரித்துறை சம்மன்... விஜய் எடுத்துள்ள முடிவு...! புதிய தகவல்


Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: