ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தலைவி' படத்திற்கு தடை கேட்க தீபாவிற்கு எந்த உரிமையும் இல்லை - இயக்குனர் ஏ.எல்.விஜய்

தலைவி' படத்திற்கு தடை கேட்க தீபாவிற்கு எந்த உரிமையும் இல்லை - இயக்குனர் ஏ.எல்.விஜய்

தீபா மற்றும் ஏ.எல்.விஜய்

தீபா மற்றும் ஏ.எல்.விஜய்

தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தை வெளியிடுவதற்கு முன்பு தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்திற்கு தடை கேட்க தீபாவிற்கு எந்த உரிமை இல்லை என இயக்குனர் ஏ.எல்.விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் தலைவி என்ற பெயரில் இயக்குனர்

ஏ.எல்.விஜய், இந்தியில் ஜெயா என்ற பெயரில் ஹைதரபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தொடரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்..

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சுப்பையா அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்த போது, இயக்குனர் ஏ எல் விஜய் மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தலைவி' என்ற புத்தகத்தின் அடிப்படையிலேயே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தீபா ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், பொதுத் தளங்களில் வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்த கதை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலிதாவை நல்ல முறையிலேயே சித்தரித்து உள்ளதாகவும் எதிர்கால சந்ததியினர் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இந்த படத்திற்கு தடை கேட்க தீபாவுக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

Also read... கடன்கொடுக்கும் 1,509 ஆன்லைன் செயலிகள் மீது ரிசர்வ் வங்கியிடம் குவிந்துள்ள புகார்கள்...

தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தை வெளியிடுவதற்கு முன்பு தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . இயக்குனர் விஜய் தரப்பு வழக்கறிஞர், படத்தை சென்சார் போர்டு பார்த்து தணிக்கை செய்யும் என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: J Deepa, Thalaivi