AL Vijay: அக்டோபர் 31 லேடீஸ் நைட் - தலைவிக்கு முன் வெளியாகும் ஏ.எல்.விஜய் படம்!

இயக்குனர் விஜய்

மலையாளம் கிரீடம் படத்தை தமிழில் அதேபெயரில் ரீமேக் செய்து இயக்குனர் வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஏ.எல்.விஜய். இதுவரை சுமார் 15 படங்கள் இயக்கியுள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை தலைவி என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். கங்கனா ரனவத் ஜெயலலிதாவாகவும், அரவிந்த்சாமி எம்ஜிஆராகவும் நடித்திருக்கும் இப்படம், முன்பே திரைக்கு வந்திருக்க வேண்டியது. கரோனா ஊரடங்கில் திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தை தயாரிப்பாளர்கள் வெளியிடவில்லை. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் இப்படத்தை முதலில் திரையரங்கில் வெளியிடுவதே தயாரிப்பாளர்களின் விருப்பமாக உள்ளது.

தலைவியை முடித்த கையோடு, அக்டோபர் 31 லேடீஸ் நைட் என்ற படத்தை .எல்.விஜய் இயக்கி முடித்துள்ளார். இது முழுக்க பெண்களைப் பற்றிய திரைப்படம். ஒரே இரவில் நடப்பது. நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளனர். மினிமம் பட்ஜெட்டில் .எல்.விஜய்யே இப்படத்தை தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓடிடி தளத்துக்கென்றே எடுக்கப்பட்ட இப்படம் முடிவடைந்து போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. தலைவிக்கு முன்பே இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஓடிடி தளங்களுடன் .எல்.விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Also read... நடிகர் சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன் பாபு...!

மலையாளம் கிரீடம் படத்தை தமிழில் அதேபெயரில் ரீமேக் செய்து இயக்குனர் வாழ்க்கையை ஆரம்பித்தவர் .எல்.விஜய். இதுவரை சுமார் 15 படங்கள் இயக்கியுள்ளார். அதில் மதராசப்பட்டணம், தேவி தவிர்த்து மற்ற அனைத்துப் படங்களும் வணிகரீதியாக வெற்றி பெறாதவை. கடைசியாக அவரது இயக்கத்தில் வந்த தேவி 2, வாட்ச்மேன், லட்சுமி, தியா, வனமகன் ஆகியவை தோல்விப்படங்கள். நான்கு நாயகிகள் விஜய்க்கு வெற்றியை தருவார்களா, பார்ப்போம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: