• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தனுஷ் பட இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி

தனுஷ் பட இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி

தனுஷ் உடன் இயக்குநர் ஆனந்த் எல்.ராய்

தனுஷ் உடன் இயக்குநர் ஆனந்த் எல்.ராய்

பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஏற்கெனவே ராஞ்சனா, சமிதாப் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மூன்றாவதாக மீண்டும் ராஞ்சனா பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் ‘Atrangi Re’ என்ற படத்தில் இணைந்தார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் தனுஷ் உடன் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபர் மாதத்தில் மதுரையில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நவம்பர் மாதத்தில் டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தனுஷ் நடித்த காட்சிகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்நிலையில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில் கூறியுள்ளதாவது, “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எந்தவித அறிகுறிகளும் இல்லை. நலமாக இருக்கிறேன். தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



ஆனந்த் எல்.ராய்.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அத்ரங்கி ரே படக்குழுவினர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: