‘தம்பி வா, தலைமை ஏற்க’; சர்ச்சையை கிளப்பும் விஜய் ரசிகர்கள்!

சர்ச்சை சுவரொட்டி

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி பதிவு செய்யப்பட அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக,  தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்துள்ள கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விஜய் வேகவேகமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்

  • Share this:
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஓட்டியுள்ள சுவரொட்டிகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து  வருபவர் நடிகர் விஜய். தனது நடிப்பு மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோரை கவர்ந்து தனது ரசிகராக அவர் மாற்றியுள்ளார்.  திரையுலகின் முன்னணி நடிகராக உள்ளபோதிலும் அரசியல் சர்ச்சைகளும் நடிகர் விஜயை சுற்றி அவ்வப்போது வட்டமிட்டு வருகின்றன.

தலைவா, வேலாயுதம் போன்ற திரைப்பட வெளியீடு அரசியல் சர்ச்சையில் சிக்கின.

கடந்த ஆண்டு நடிகர் விஜய் பெயரில் புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்தார். அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி பதிவு செய்யப்பட அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக,  தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்துள்ள கட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விஜய் வேகவேகமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அரசியல் ரீதியாக தனது தந்தையின்  நடவடிக்கைகள் தன்னை கட்டுப்படுத்தாது என்றும், தனது ரசிகர்கள் இந்த கட்சியில் இணைய வேண்டாம் என்றும் அவர் அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.

மேலும் படிக்க: கோவில் சொத்துக்கள் ட்ரோன் மூலம் கண்டறிவு...

இதேபோல், தேர்தலின்போது அவர் சைக்கிளில் வந்து வாக்களித்ததும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது, பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்தும் தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்தியே அவர் சைக்கிளில் வந்து வாக்களித்ததாக அவரது ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், நடிகர் விஜயின் 47வது பிறந்த நாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் மூலம் விஜயின் பிறந்தநாளை கொண்டாட ஒருசில ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி நடிகர்  விஜய் தொடர்பான அரசியல் சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் கையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கோலை வழங்குவது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ள அந்த சுவரொட்டியில் பின்னணியில் தலைமை செயலகமும் இடம் பெற்றுள்ளது. மேலும்,  ஏழை எளிய மக்களுக்கு நல்லாட்சியை வழங்கிட தம்பி வா, தலைமை ஏற்க என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

திண்டுக்கல் மணிக்கூண்டு  இளைஞரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி விஜய் ரசிகர்கள் மற்றும் திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Murugesh M
First published: