ரசிகர்களின் அன்பு மழை... புதிய சாதனை படைத்த சுஷாந்தின் கடைசி பட ட்ரெய்லர்
தில் பேச்சாரா படத்தின் ட்ரெய்லர் உலக அளவில் சாதனை படைத்துள்ளது.
- News18 Tamil
- Last Updated: July 7, 2020, 8:42 PM IST
ஜான் க்ரீன் எழுதிய "தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்" என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தில் பேச்சாரா. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ஜூலை 24-ம் தேதி இத்திரைப்படம் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சுஷாந்துக்காக இத்திரைப்படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில் உலக அளவில் அதிகம் பேர் விரும்பிய ட்ரெய்லராக தில் பேச்சாரா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் படத்தின் ட்ரெய்லருக்கு 36 லட்சம் லைக்குகள் கிடைத்திருக்கும் நிலையில் 24 மணி நேரத்தில் சுஷாந்தின் தில் பேச்சாரா ட்ரெய்லருக்கு 2.94 கோடி பார்வைகள், 60 லட்சம் லைக்குகள் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் உலக அளவில் சுஷாந்த் சிங்கின் கடைசி படட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது. விஜய்யின் பிகில் பட ட்ரெய்லர் இந்திய அளவில் அதிகம் லைக்குகள் பெற்றதாக இருந்த நிலையில் அந்த சாதனையையும் தில் பேச்சாரா முறியடித்துள்ளது. ரசிகர்களின் அன்பு மழையால் சுஷாந்த் மற்றும் தில் பேச்சாரா பட ட்ரெய்லர் நனைவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த் சிங், கடந்த மாதம் 14-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் குடும்பத்தினர், திரை பிரபலங்கள் என பலரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூலை 24-ம் தேதி இத்திரைப்படம் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சுஷாந்துக்காக இத்திரைப்படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில் உலக அளவில் அதிகம் பேர் விரும்பிய ட்ரெய்லராக தில் பேச்சாரா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் படத்தின் ட்ரெய்லருக்கு 36 லட்சம் லைக்குகள் கிடைத்திருக்கும் நிலையில் 24 மணி நேரத்தில் சுஷாந்தின் தில் பேச்சாரா ட்ரெய்லருக்கு 2.94 கோடி பார்வைகள், 60 லட்சம் லைக்குகள் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் உலக அளவில் சுஷாந்த் சிங்கின் கடைசி படட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது.