15 கேள்விகளுக்கும் சரியான பதில்: கலர்ஸ் தமிழ் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்ற மாற்றுத்திறனாளி கௌசல்யா

15 கேள்விகளுக்கும் சரியான பதில்: கலர்ஸ் தமிழ் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்ற மாற்றுத்திறனாளி கௌசல்யா

கவுசல்யா | ராதிகா

  • News18
  • Last Updated :
  • Share this:
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா 15 கேள்விகளுக்கும் சரியான விடையளித்து கோடீஸ்வரி ஆகியுள்ளார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த கௌசல்யா வாய் பேசமுடியாமல் காது கேட்காமல் இருந்து வருபவர். இந்த குறைகளை கடந்து தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபிப்பதற்காக கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தற்போது 1 கோடி ரூபாய் வென்றது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். நீதிமன்றம் ஒன்றில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் அவர் குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக வேண்டும் என்பதே ஆசை என்று கூறுகிறார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ராதிகா சரத்குமார் , இந்நிகழ்ச்சி பெண்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற ஒரு தளமாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு தலைவர் அனுப் சந்திரசேகரன் இது பெண்கள் அனைவருக்கும் பெருமையான தருணம் என்று தெரிவித்துள்ளார்.

கெளசல்யா கலந்துகொண்ட நிகழ்ச்சியின் ஒருபகுதி கீழே:Also see...


Published by:Vinothini Aandisamy
First published: