முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினி குறித்து பரவிய செய்தி - உண்மை நிலவரம் என்ன?

ரஜினி குறித்து பரவிய செய்தி - உண்மை நிலவரம் என்ன?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

கொரோனா பரவலையொட்டி முதலமைச்சருடன் ரஜினி பேசினார் என்று வெளியான செய்தி தவறானது என ரஜினி தரப்பில் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நோய்த் தொற்று அதிகரித்து வரக்கூடிய இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார் என சில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, முதலமைச்சரிடம் தொடர்புகொண்டு தொற்று பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்ததாக தகவல்கள் பரவத் தொடங்கியன.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் விசாரித்தபோது, இதுவரை முதலமைச்சர் எடப்பாடி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும் இல்லை. அவரைச் சந்திப்பதற்கு நேரம் கேட்கவுமில்லை என்று கூறுகின்றனர்.

மேலும், தவறான செய்தி அவ்வப்போது வெளிவருகிறது என ரஜினி வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

Also see:

First published:

Tags: Fake News, Rajinikanth