• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கெட்ட வார்த்தை... பெட்ரூம் காட்சிகள்...! சென்சாரில் வெட்டப்பட்டதை வீடியோவாக வெளியிட்ட த்ருவ் விக்ரம்...!

கெட்ட வார்த்தை... பெட்ரூம் காட்சிகள்...! சென்சாரில் வெட்டப்பட்டதை வீடியோவாக வெளியிட்ட த்ருவ் விக்ரம்...!

ஆதித்ய வர்மா படத்தில் த்ருவ் விக்ரம்

ஆதித்ய வர்மா படத்தில் த்ருவ் விக்ரம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆதித்ய வர்மா படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகளை, சென்சார் போர்டு வெட்டிய நிலையில், அந்த காட்சிகளை த்ருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார்.

    இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படம் ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

    பாலாவின் சில காட்சிகளில் விக்ரமுக்கு உடன்பாடு இல்லை அதனால், படம் கைவிடப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியானது.

    இதையடுத்து இந்தப் படத்தை அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்காவிடம் உதவியாளராகப் பணியாற்றிய கிரிசய்யா ஆதித்ய வர்மா என்ற டைட்டிலுடன் இயக்கினார்.

    பாலிவுட் படமான அக்டோபர் படத்தில் நடித்து கவனம் பெற்ற பனிதா சந்து இந்தப் படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரியா ஆனந்தும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

    கடந்த நவம்பர் மாதத்தில் இந்தப்படம் வெளியானது. ஏற்கனவே, தெலுங்கு மற்றும் இந்தியில் பலரும் படத்தை பார்த்திருந்ததால் அந்த அளவுக்கு பெரிய வரவேற்ப்பை பெறவில்லை என்று கூறப்பட்டது.

    எனினும், த்ருவ் விக்ரம் சிறப்பாக நடித்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர். படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகளை சென்சார் கட் செய்த நிலையில், அந்த காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ருவ் வெளியிட்டுள்ளார்.




    படத்தில் நாயகன் கெட்ட வார்த்தைகள் பேசும் காட்சிகள் மற்றும் கதாநாயகி உடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: