விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. தனது கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவரை ரசிகர்கள் செல்லமாக டிடி என அழைக்கின்றனர். இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.
இவர் தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில வருடங்களில் கருத்து மோதல்கள் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதனை தொடந்து டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் நடிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
டிடி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்-வாக இருப்பவர் என்பதால், அவ்வப்போது மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி விடுவார். இதனால் அவர் லைவ் சாட்டில் வரும் நேரத்தில் அவரது ரசிகர்கள் எண்ணற்ற கேள்விகளை எழுப்புவார்கள். அந்த வகையில் சமீபத்தில் டிடி பேசிய போது அவரது ரசிகர் ஒருவர், அடுத்து வரும் குக் வித் கோமாளி சீசன் 3ல் குக்-காக வருமாறு கூறினார். அதற்கு பதில் அளித்த டிடி, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் பங்கேற்பேன் என்று கூறியுள்ளார்.
ALSO READ | ஊசியில்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா நயன்தாரா - நெட்டிசன்கள் கேள்வி
விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘குக் வித் கோமாளி’. சமையல் நிகழ்ச்சியான இதில் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் கோமாளிகளின் சேட்டைகளைச் சகித்துக் கொண்டு சமைத்து முடிக்க வேண்டும். இதனிடையே கோமாளிகளுக்கு வேடிக்கையான டாஸ்க்குகளும் கொடுக்கப்படும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசனில், கோமாளிகளாக புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, தங்கதுரை உள்ளிட்டோர் கோமாளிகளாக இடம் பெற்றனர். அதேபோல அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷகிலா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா உள்ளிட்டோர் குக்குகளாக கலந்து கொண்டனர்.
ALSO READ | 'பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி' ஆதரவற்றோருக்கு உதவி வரும் நடிகை சரண்யா சுந்தர்ராஜ்!
இரண்டாவது சீசனில் கனி வெற்றி பெற்றார். அவருக்கு 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஷகிலா மற்றும் அஸ்வின் இருவரும் ரன்னர்களாக அறிவிக்கப்பட்டனர். மேலும் இந்த சீசனில் அஸ்வின், புகழ், சிவாங்கி ஆகியோர் எண்ணற்ற ரசிகர்களை பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால் வர இருக்கும் மூன்றாவது சீசனுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.