• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கிஸ் மீ... குடும்ப பேய்களுடன் காமெடியில் அசத்தும் சந்தானம்: தில்லுக்கு துட்டு 2 டீசர்

கிஸ் மீ... குடும்ப பேய்களுடன் காமெடியில் அசத்தும் சந்தானம்: தில்லுக்கு துட்டு 2 டீசர்

தில்லுக்கு துட்டு 2 போஸ்டர்

தில்லுக்கு துட்டு 2 போஸ்டர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சந்தானம் நடித்திருக்கும் தில்லுக்கு துட்டு 2 படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இதையடுத்து இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கப்போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார்.

    சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் தில்லுக்கு துட்டு 2 படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகை ஷிர்தா சிவதாஸ், ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சந்தானமே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்' மூலம் தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்த படக்குழு, தற்போது படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் தனக்கே உரிய பாணியில் சந்தானம் பேய்களுடன் காமெடியில் அசத்தியிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: