லைக்ஸை குவிக்கும் மாஸ்டர் விஜய்யுடன் தீனாவின் படம்!

லைக்ஸை குவிக்கும் மாஸ்டர் விஜய்யுடன் தீனாவின் படம்!

மாஸ்டர் விஜய்

இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று லைக்ஸை குவித்து வருகிறது.

 • Share this:
  லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று 200 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷன், மற்றும் சாந்த்னு ஆகியோர் நடித்திருந்தனர்.

  இப்படத்தில் விஜய் ஜே.டி. என்ற பேராசிரியராகவும், விஜய் சேதுபதி பவானி என்ற டானாகவும், நடித்திருந்தனர். அதோடு பிரபலமான பல நடிகர்களும் மாஸ்டரில் இடம் பெற்றிருந்தனர். இதில் 'கைதி' மற்றும் 'ப பாண்டி' புகழ் தீனாவும் அடங்குவர். செவ்வாய் கிழமையன்று, விஜய்யுடன் தான் இருக்கும், யாரும் பார்க்காத படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

  இந்தியில் ரீமேக்காகும் ’ஓ மை கடவுளே!’   
  View this post on Instagram

   

  A post shared by dheena (@dheena_offl)


  "மாஸ்டரிடமிருந்து காதல்.. #தளபதி" என தலைப்பிட்டு அந்தப் படத்தைப் பகிர்ந்தார். இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று லைக்ஸை குவித்து வருகிறது. பின்னர் அவர் திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கார்த்தி நடித்த 'கைதி' படத்திற்காக முதலில் லோகேஷ் கனகராஜுடன் தீனா இணைந்தது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: