தர்மபிரபு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
`கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக இயக்கிவரும் படம் `தர்மபிரபு'. முழுநீள நகைச்சுவை படமாக உருவாகும் இந்தப் படத்தில் யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். நடிகை ஜனனி ஐயர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்து படமாக்கி வந்தனர் படக்குழுவினர்.
ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.