’தி கிரே மேன்’ படத்தில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்தது!
’தி கிரே மேன்’ படத்தில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்தது!
தனுஷ்
மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் ரயால் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் ஆகியோருடன் வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் மற்றும் ஜெஸிகா ஹென்விக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
’தி கிரே மேன்’ படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கும் நிலையில், இந்த படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக சமீபத்தில் தனுஷ் அமெரிக்கா சென்றார்
இந்த படம் மார்க் கிரேனி என்பவர் எழுதிய ‘தி கிரே மேன்’ என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் அதிரடி ஹாலிவுட் படமாகும்.
இப்படத்தை ஆந்தோனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்கி வரும் நிலையில், ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் உடன் நடிகர் தனுஷ் இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எழுத்தாளர் மார்க் கிரேனி, தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவை சேர்ந்த ஒருவர் அமெரிக்க படத்தில் நடிப்பது எனக்கு பிடித்திருக்கிறது. தனுஷ் குறித்து எனக்கு எதுவும் தெரியாமல் இருந்தது.
ஆனால் ட்விட்டரில் எனக்கு வெறும் 6000 ஃபாலோயர்ஸ்கள் தான் உள்ளனர். ஆனால் அவருக்கோ 9.7 மில்லியன் ஃபாலோயர்ஸுகள் இருக்கின்றனர். இது பெரிய விஷயம் என அவர் தெரிவித்தார். மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் ரயால் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் ஆகியோருடன் வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் மற்றும் ஜெஸிகா ஹென்விக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்த பின்னர் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.