முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தனுஸ்ரீ தத்தா புகார்: நானா படேகரை தொடர்ந்து பலர் மீதும் வழக்குப்பதிவு!

தனுஸ்ரீ தத்தா புகார்: நானா படேகரை தொடர்ந்து பலர் மீதும் வழக்குப்பதிவு!

தனுஸ்ரீ தத்தா| நானா படேகர்

தனுஸ்ரீ தத்தா| நானா படேகர்

  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் நானா படேகர், நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமி சித்திக் மற்றும் இயக்குநர் ராகேஷ் சராங் ஆகியோர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று தனியார் தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் தனுஸ்ரீ தத்தா தெரிவித்திருந்தார். அதில், கடந்த 2008- ம் ஆண்டு `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் நானா படேகர் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த நானா படேகர், "நான் 2008 –ம் ஆண்டே இந்த சர்ச்சைக்கு பதிலளித்துவிட்டேன்” என்று கூறினார். தனுஸ்ரீ தன் மகள் வயதுடையவர் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். திரைத்துறையில் 35 ஆண்டு காலத்தில் யாரும் தன்னை குற்றம் சாட்டியதில்லை என்றவர், தன் மீது குற்றம்சாட்ட தனுஸ்ரீயை தூண்டியது யார் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் பதிலளித்தார்.

நடிகை தனுஸ்ரீ தத்தா

இந்நிலையில் மும்பையில் உள்ள ஒஷிவாரா காவல்நிலையத்திற்கு தனுஸ்ரீ தத்தா நேரில் சென்று புகார் அளித்தார். இதனடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலவந்தப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ்  நடிகர் நானா படேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மும்பை காவல்துறையினர் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமி சித்திக் மற்றும் இயக்குநர் ராகேஷ் சராங் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ALSO READ...

காலா வில்லன் நிஜத்திலும் வில்லன் தான்!

"தனுஸ்ரீக்கு என் பொண்ணு வயசு" - நானா படேகர்

First published:

Tags: Case filed on celebrities, Dhanushree Dutta, Mumbai Police, Nana Patekar, Sexual harassment