Home /News /entertainment /

திருடன் கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ்!

திருடன் கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ்!

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

கொடி படத்தை அடுத்து நடிகர் தனுஷ் - துரை செந்தில் குமார் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    திருடன் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    கொடி படத்தை அடுத்து நடிகர் தனுஷ் - துரை செந்தில் குமார் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் தந்தை, மகன் என்று இரு வேடங்களில் நடிக்கிறார். அதில் தந்தை கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். மகன் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

    இந்தநிலையில் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ் திருடன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

    தற்போது குற்றாலத்தில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு தனுஷ், சினேகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விவேக் - மெர்வின் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மேலும் இந்தப் படத்துக்கு வெற்றிமாறன் வசனம் எழுதியுள்ளார். ஏற்கெனவே இயக்குநர் துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், கொடி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.



    துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது.

    அரசியலில் குதித்தார் பவர் ஸ்டார் சீனிவாசன் - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor dhanush, Tamil Cinema

    அடுத்த செய்தி