Dhanush: புதிய வீட்டிற்கு 150 கோடி செலவிடும் தனுஷ்...?

தனுஷ்

தனுஷ் சென்னையின் மையமான போஸ் கார்டனிலேயே தனது கனவு மாளிகையை கட்டுகிறார். சூர்யா - கார்த்தி இதேபோல் பிரமாண்ட வீட்டை திநகரில் கட்டியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு இருப்பது தெரியும். அதே பகுதியில் பிரமாண்டமாக வீடு கட்டி வருகிறார் தனுஷ். இதன் மொத்த பட்ஜெட் 150 கோடிகள் என செய்தி கசிந்துள்ளது.

அண்ணன் செல்வராகவனைப் போலன்றி, தனது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துகிறவர் தனுஷ். அப்படித்தான் 21 வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படி திருமணமும் செய்தார். கரியர், சொந்த வாழ்க்கை இரண்டிலும் துல்லியமான திட்டமிடலே அவரை இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்த்திருக்கிறது. சொந்த வாழ்க்கையில் ரஜினியின் மருமகன். சினிமாவில் தமிழில் அறிமுகமாகி இந்தி, ஹாலிவுட் என உலக அளவில் உயர்ந்திருக்கிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வருடம் பிப்ரவரியில் போயஸ் கார்டனில் புதிய வீட்டிற்கு ரஜினியை வைத்து பூமி பூஜை போட்டார் தனுஷ். இந்த வீட்டின் மொத்த பட்ஜெட் 150 கோடிகள் என்கிறார்கள். சுமார் 19,000 சதுர அடியில் இந்த வீடு தயாராகிறது. இது சுமார் 8 கிரவுண்டுகள் அளவு

Also read... Arya: டெடி இயக்குனரின் புதிய படத்தில் ஆர்யா - சுவாரஸியமான அப்டேட்!

பொதுவாக முன்னணி நடிகர்கள் சென்னைக்கு வெளியே கிழக்குக்கடற்கரை சாலையில்தான் பண்ணைவீடுகளை பிரமாண்டமாகக் கட்டி குடியிருக்கிறார்கள். தனுஷ் சென்னையின் மையமான போஸ் கார்டனிலேயே தனது கனவு மாளிகையை கட்டுகிறார். சூர்யா - கார்த்தி இதேபோல் பிரமாண்ட வீட்டை திநகரில் கட்டியுள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: