விஜயின் பீஸ்ட் படத்தில் தனுஷ்? - சஸ்பென்ஸ் அப்டேட்..!

Beast Vijay - Dhanush

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் தனுஷ் இணைய இருப்பதாக தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது உண்மையா?

  • Share this:
மாஸ்டர், பிகில், மெர்சல், தெறி, சர்கார் என வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வரும் தென்னிந்தியாவின் பிளாக் பஸ்டர் நாயகனான நடிகர் விஜய், அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் படம் பீஸ்ட்.


 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு நாயகியாகி இருப்பவர் பூஜா ஹெக்டே, அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஜார்ஜியாவில் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து சென்னை ஈசிஆர் சாலையில் தற்போது 3வது கட்ட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.


இதனிடையே பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. செல்வராகவன் இப்படத்தின் வில்லனா என்ற பேச்சு ஒரு பக்கம் இருந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகர்கள் விடிவி கணேஷ், யோகி பாபு, லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ ஆகியோரும் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.இதனிடையே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ், இவர் நடிப்புடன் சேர்த்து பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை உடையவர். இந்நிலையில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் நடிகர் தனுஷ் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.


பீஸ்ட் படத்தில் தனுஷ் பாடல் ஒன்றை பாட உள்ளதாகவும், அவரே அந்த பாடலை எழுத உள்ளதாகவும் தகவல்கள் தீயாக பரவிக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் உறுதிப்படுத்தப்படாத இத்தகவலை தனுஷ் தரப்பில் மறுத்திருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
Published by:Arun
First published: