Home /News /entertainment /

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' ரிலீஸ் டேட் அறிவிப்பு... அப்டேட் சொன்ன உதயநிதி!!

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' ரிலீஸ் டேட் அறிவிப்பு... அப்டேட் சொன்ன உதயநிதி!!

Dhanush

Dhanush

Thiruchitrambalam | தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

திரையுலகில் தனுஷ் அறிமுகமாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைவதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'திருச்சிற்றம்பலம்' திரைபடத்தின் வெளியீட்டு தேதி தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ரசிகர்கள் இப்படத்தின் இசை எவ்வாறு அமைந்துள்ளது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கதாநாயகனின் கல்லூரி நாட்கள் மற்றும் அவனது இளமைப் பருவம் என இப்படத்தின் கதையானது இரண்டு காலகட்டங்களில் எடுக்கப்பட்டுள்ளது. தனுஷின் கதாபாத்திரத்தில் இரண்டு காதல்கள் உள்ளன, ஒன்று கல்லூரிப் பகுதிகளிலும் மற்றொன்று அவரது வாழ்க்கையின் பிற்பகுதியிலும் வருகின்ற மாதிரி கதையை வடிவைத்திருக்கிறார் இயக்குனர். நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாக இப்படத்தில் இணைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘குட்டி’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றுயுள்ளனர் .



இப்படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார்.

Also Read : Exclusive : ‘எல்லா நேரங்களிலும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்’ – ரசிகர்கள் குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

உதயநிதி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் குறித்த சமீபத்திய பேட்டி ஓன்றில் கலந்துகொண்ட அவர், தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் படங்கள் குறித்து கூறினார். அப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' வருகின்ற ஜூலை 1 அன்று திரைக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Also Read : 'பிசாசு 2' நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..!

கடந்த ஆண்டு வெளியான கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷின் எந்தப் படமும் தியேட்டர்களில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்திலிருந்து தனுஷின் ஸ்டில் இணையதளத்தில் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை அதிரித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Dhanush, Entertainment, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி