• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Karnan: தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் ரிலீஸ் ஆனது

Karnan: தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் ரிலீஸ் ஆனது

கர்ணன் பட ஸ்டில்

கர்ணன் பட ஸ்டில்

தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படம் காலை 6 மணி முதல் சிறப்பு காட்சிகளோடு நாடு முழுவதும் திரையிடப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா கட்டுப்பாடுகளையும் ஏற்று தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவிய நாள் முதல் திரைத்துறை துவண்டு போய் இருக்கிறது. திரையரங்குகள் மூடப்பட்டு பின்னர் 50% இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள்ளும் திறக்கப்பட்டாலும் ரசிகர்களின் வருகை குறைவாகவே இருந்து வந்தது. விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளியானபோது இந்த நிலை சிறிது மாறியது என்றே சொல்லலாம். பின்னர் மீண்டும் துவண்ட திரைத்துறை நூறு சதவீத இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பின் பிறகும் அமைதியாகவே இருந்து வந்தது. தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் இந்த நிலையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஏற்கனவே கர்ணன் திரைப்படத்தை என்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது, அது திட்டமிடப்பட்ட படியே வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு நேற்று அறிவித்து இருந்தார். அதனடிப்படையில் கர்ணன் இன்று காலை வெளியாகியிருக்கிறது.

தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படம் காலை 6 மணி முதல் சிறப்பு காட்சிகளோடு நாடு முழுவதும் திரையிடப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் மேலும் இசைத்து உற்சாக நடனம் ஆடி கர்ணனை வரவேற்றார்கள். பேனர்களும் கட்அவுட்களும் வைக்கப்பட்டு ரசிகர்கள் தனுஷிற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ரோகிணி திரையரங்கில் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தனர்.

Also read... ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி

நாளை முதல் மீண்டும் குரானா கட்டுப்பாடுகள் திரையரங்குகளுக்கு அமலுக்கு வருவதால் இன்றே பெரும்பாலான வசூலை ஈட்டுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கட்டுப்பாடுகள் விதிக்கப் படுவதால் எங்களுக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை. 100 நாட்கள் ஓட வேண்டிய திரைப்படம் 200 நாட்கள் ஓடும் என தயாரிப்பாளர் தாணு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ள தனுஷிற்கு இந்த திரைப்படம் மற்றொரு விருதை பெற்றுத் தரும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: