Dhanush: இயக்குநர் ராஜேஷின் புதிய படத்தில் இணைந்த தனுஷ்

தனுஷ் - ஜி.வி.பிரகாஷ்- இயக்குநர் ராஜேஷ்

ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் பணியாற்றுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநரான எம்.ராஜேஷ், பாஸ் என்கிற பாஸ்கரன் ஒரு கல் ஒரு கண்ணாடி என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கிய மிஸ்டர். லோக்கல் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ரசிகர்களிடையேயும் கலவையான விமர்சனங்களை அந்தப் படம் பெற்றது.

அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் ராஜேஷ். சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகை அம்ரிதா ஐயர், ரேஷ்மா, யோகி பாபு, பிக்பாஸ் டேனியல், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படமும் ராஜேஷின் முந்தைய படங்களைப் போல முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இணைந்திருப்பதாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அதில் அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த வருடத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் பாட இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ராஜேஷ் இயக்கத்தில் நான் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் விரைவில் வெளியாகும். ‘டாட்டா பை பை’ என்ற முதல் பாடலை கானா வினோத் எழுதுகிறார்.



 




View this post on Instagram





 

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash)






தனுஷ் நடித்த ஆடுகளம், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ், அவருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக 8 வருடங்களாக இணைந்து பணியாற்றாமல் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணியை ‘ஜெயில்’ படத்தின் மூலம் வசந்தபாலன் சேர்த்து வைத்தார். அதைத்தொடர்ந்து தனுஷின் அசுரனுக்கு இசையமைத்தார் ஜி.வி.பிரகாஷ். அந்தப் படத்தின் வெற்றிக்கு இசை முக்கிய காரணமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: