தனுஷின் ‘கர்ணன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷின் ‘கர்ணன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் உடன் மாரி செல்வராஜ்

தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

  • Share this:
மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

திருநெல்வேலி அருகே கிராமம் போன்ற செட் அமைத்து படத்தின் பெரும்பகுதியை படமாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். டிசம்பர் 9-ம் தேதியுடன் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் இத்திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக ஸ்பெஷல் டீசர் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஜனரஞ்சகமாக பேசி இருந்ததன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கர்ணன் திரைப்படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



‘கர்ணன்’ திரைப்படத்தை அடுத்து பாலிவுட்டில் அக்‌ஷய்குமாருடன் அத்ரங்கி ரே படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் ’நானே வருவேன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

2020-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட ‘ஜகமே தந்திரம்’ கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. இதனிடையே ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாக உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் இன்னும் படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
Published by:Sheik Hanifah
First published: