சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் தனுஷின் சூப்பர் ஹிட் படம்?

நடிகர் தனுஷ்

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • Share this:
  தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான படம் அசுரன். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தில் தனுஷ் ஏற்று நடித்திருந்த சிவசாமி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றது.

  ஜி.வி.பிரகாஷ் இசையில் தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

  இதையடுத்து தெலுங்கில் இத்திரைப்படம் நரப்பா என்ற டைட்டிலில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் நடித்த சிவசாமி கேரக்டரில் நடிகர் வெங்கடேஷூம், மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் பிரியாமணியும் நடிக்கின்றனர். இந்நிலையில் இத்திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

  முன்னதாக பாகுபலி, எந்திரன், 2.0 ஆகிய படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டிருந்த நிலையில் அசுரன் திரைப்படம் முதல்முறையாக சீன மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா லாக்டவுன் முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

  மேலும் படிக்க: ‘கொரோனானு சொன்னா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வராதீங்கனு சொல்றாங்க’ - நடிகரின் அதிர்ச்சி வீடியோ


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sheik Hanifah
  First published: