Home /News /entertainment /

ரசிகர்களுக்கு ‘அசுரன்’ அப்டேட் கொடுத்த தனுஷ்!

ரசிகர்களுக்கு ‘அசுரன்’ அப்டேட் கொடுத்த தனுஷ்!

அசுரன் படத்தில் நடிகர் தனுஷ்

அசுரன் படத்தில் நடிகர் தனுஷ்

  • News18
  • Last Updated :
    தானாக முன்வந்து ரசிகர்களுக்காக அசுரன் பட அப்டேட் கொடுத்துள்ளார் நடிகர் தனுஷ்.

    ‘வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து தனுஷுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். ‘அசுரன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி துவங்கியது.

    கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி  வரும் ‘அசுரன்’ படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகிறார். படத்தில் பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் பாடல்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், “அசுரன்' படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டதாகவும், அதில் ஒன்று சூப்பர் டான்ஸ் பாடல் என்றும் , இந்தப் பாடலுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் ஆச்சரிய தகவல் உண்டு என்றும் கடந்த மார்ச் இறுதியில் கூறியிருந்தார்.

    இந்நிலையில் அசுரன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



    நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலாகும் ஓவியா-ஆரவ் புகைப்படங்கள்






    சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor dhanush, Asuran

    அடுத்த செய்தி