Dhanush: ஹைதராபாத்தில் தனுஷ் - கார்த்திக் நரேனுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்!

நடிகர் தனுஷ்

தனுஷின் 43 வது படமான இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்ற தனுஷ் இன்று ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

தி க்ரே மேன் படப்பிடிப்பு பல வாரங்கள் முன்பு முடிந்த போதிலும், கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கியிருந்தார் தனுஷ். நேற்று சென்னை திரும்பிய அவர், இன்று படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனுஷ் தமிழில் பல படங்களில் நடிக்க உள்ளார். முதலாவதாக கார்த்திக் நரேன் இயக்கும் படம் தயாராகிறது. தனுஷின் 43 வது படமான இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. அதில்தான் தனுஷ் கலந்து கொண்டார்.

Also read... Yogi Babu: யோகி பாபு, மிர்ச்சி சிவா - மீண்டும் இணைந்த சிரிப்புக் கூட்டணி...!

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதுகிறார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. D43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜுலையில் தொடங்குவதாக சத்யஜோதிதி செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன், சேகர் கம்முலா, மாரி செல்வராஜ், ராட்சசன் ராம்குமார் என பலரது இயக்கத்தில் தனுஷ் நடிக்கயிருக்கிறார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: