ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ரசிகர் உருவாக்கிய போஸ்டரை ‘வாவ்’எனக் கூறி வெளியிட்ட தனுஷ்..

தனுஷ்

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் மற்றொரு போஸ்டரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
    செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ரீமாசன், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் சேர, சோழ, பாண்டியர்களின் வரலாற்றுப் புனைவாக அமைந்து இருந்தது. இது ஒரு வரலாற்று புனைவுகதை என்பதால் படம் வெளியான போது ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

    ஆனால் சில ஆண்டுகளில் சினிமா பிரியர்களுக்கு மிகவும் பிடித்த படமாக ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மாறியது. இதனால் படத்தின் இயக்குனரான செல்வராகவனிடம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மீண்டு திரையிடப்பட்டது. அதில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தில் தனுஷ் நடிப்பதை உறுதி செய்து செல்வராகவன் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு 2024 ல் தான் படம் வெளியாகும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். உடனே ரசிகர்கள் இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய நிலையில், படத்தின் ப்ரீ புரொடக்‌ஷனிற்கு மட்டும் ஒரு வருடம் தேவைப்படும் என தனுஷ் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில் ரசிகர் ஒருவரால் உருவாக்கப்பட்ட ஃபேன் மேட் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை ‘வாவ்’ என்றுக் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Tamilmalar Natarajan
    First published: