நான் வேகமாக முடித்த படம்... கார்த்திக் சுப்புராஜை புகழ்ந்த தனுஷ்!

தனுஷ் உடன் கார்த்திக் சுப்புராஜ்

  • Share this:
    கார்த்திக் சுப்புராஜை புகழ்ந்து நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

    2019-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளியாகின. இதில் அசுரன் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றியடைந்தது. இதைத்தொடர்ந்து தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் படத்திலும் நடித்து வந்தார்.

    தற்போது பட்டாஸ் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அதன்படி பட்டாஸ் ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்திருப்பதாக நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த பதிவில், நான் மிக வேகமாக நடித்து முடித்த படங்களில் ஒன்று. கார்த்திக் சுப்புராஜ் போன்ற விவேகமான தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநர் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இது சிறப்பாக அமையும்” என்று கூறியுள்ளார்.

    அதற்கு பதிலளித்திருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி. உங்களைப் போல ஒரு சிறந்த நடிகருடன் பணியாற்றியது எனக்கும் எனது குழுவுக்கும் சிறந்த அனுபவம்” என்று தெரிவித்துள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இந்தப் படம் அவருக்கு 40-வது படம். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.



    மேலும் படிக்க: தேவதாசி முறை மிகச்சிறந்த சிஸ்டம் என்று கூறிய தாயார்... மன்னிப்புக் கேட்ட சின்மயி...!
    Published by:Sheik Hanifah
    First published: