ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

D43 படத்திற்காக தீவிரமாக நடன பயிற்சி செய்யும் தனுஷ்.. வைரல் புகைப்படம்

D43 படத்திற்காக தீவிரமாக நடன பயிற்சி செய்யும் தனுஷ்.. வைரல் புகைப்படம்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் D43 படத்திற்காக தீவிரமாக நடன பயிற்சி செய்வதாக டான்ஸ் மாஸ்டர் ஜானி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படம் டி43. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தனுஷின் 43 வது படம்  என்பதால் டி43 என்று கூறி வருகின்றனர். இந்த படத்தில் மாளவிகா மோகனன் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படம்  த்ரில்லர் படமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பணியாற்ற இருக்கும் நட்சத்திரங்களை ஒவ்வொருவராக சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பிரபல பாடலாசியரான விவேக் இந்த படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத உள்ளார் என்று சத்ய ஜோதி பிலிம்ஸ் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

  இதையடுத்து இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரகனி இந்த படத்தில் இணைய உள்ளதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு சமுத்திரகனி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

  இந்நிலையில் நடிகர் தனுஷ் D43 படத்திற்காக தீவிரமாக நடன பயிற்சி செய்வதாக டான்ஸ் மாஸ்டர் ஜானி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  அதில் தனுஷ் டான்ஸ் போஸ் ஒன்றை பதிவிட்டு ‘ சூப்பர் கிரேஸி பாடலுக்கான ரிகர்சல் நடந்துக்கொண்டிருக்கிறது, தனுஷின் அடுத்த ட்ரெண்டிங் சாங் உருவாகி கொண்டிருக்கிறது’எனப் பதிவிட்டுள்ளார். இந்த படத்திற்கு ஜி.பி.பிரகாஷ் இசையமைக்கிறார். D43 படத்தின் பெயர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Actor dhanush, Cinema