‘தர்பார்’ ரிலீசுக்குப் பின் தனுஷின் ’பட்டாஸ்’ - அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பட்டாஸ் படத்தில் நடிகர் தனுஷ்

  • Share this:
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பட்டாஸ். புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த ஜூலை மாதத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்த படக்குழு சமீபத்தில் படத்தின் முதல் பாடலை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் படம் ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.



ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரும் நிலையில் ஒருவார கால இடைவெளியில் தனுஷின் பட்டாஸ் திரைக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: