• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "சாட்டை எடுடா...கோட்டை இடிடா.." தனுஷின் பட்டாஸ் படத்தின் ’முரட்டு தமிழன்டா' பாடல் ரிலீஸ்

"சாட்டை எடுடா...கோட்டை இடிடா.." தனுஷின் பட்டாஸ் படத்தின் ’முரட்டு தமிழன்டா' பாடல் ரிலீஸ்

 ’முரட்டு தழிழன்டா

’முரட்டு தழிழன்டா

ஜனவரி 16-ம் தேதி பட்டாஸ் படம் திரைக்கு வர இருக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பட்டாஸ் படத்தில் இடம்பெற்றுள்ள 2-வது பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

    கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பட்டாஸ். புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. ’சில் ப்ரோ' என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் முரட்டு தழிழன்டா என்ற இரண்டாவது பாடலை இன்று வெளியிட்டுள்ளது.



    இந்த பாடலில் தமிழர்களின் வீரம் மற்றும் வரலாற்றை சிறப்பிக்கும் விதமான வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். ஆளப்போறான் தமிழன் தொடங்கி நடிகர் விஜய்க்கு ஓபனிங் பாடல் எழுதி வரும் பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு சும்மா கிழி என்ற பாடலை எழுதியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது  தனுஷுக்கு முரட்டு தமிழன்டா என்ற பாடலை எழுதியிருப்பது மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: