நானே வருவேன்: தனுஷ்-செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணையும் கூட்டணியின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நானே வருவேன் ஃப்ர்ஸ்ட் லுக்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

 • Share this:
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடிந்து வெளியீடுக்காக காத்திருக்கிறது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படமும் வெளியாவதற்கு தயாராகிவருகிறது. இந்தநிலையில், புத்தாண்டு அன்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்த அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டார்.

  அதில், தனுஷ் நடிப்பார் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் மற்றொரு படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் - செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணையும் இந்தப் படத்துக்கு நானே வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.


  இந்தப் படத்தின் முதல் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த பின்னணியில் ஸ்டைலான ஆடையில் சிகரெட்டுடன் தனுஷ் ஸ்டைலாக நிற்கிறார். இந்தப் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: