சர்வதேச நடன நிகழ்ச்சியில் ஒலித்த ‘மாரி’பாடல்... வாயடைத்துப் போன நடுவர்கள்

மாரி பாடலுக்கு நடனம்

சர்வதேச நடன நிகழ்ச்சியில் தனுஷின் ‘மாரி’ பட பாடலுக்கு மும்பையைச் சேர்ந்த நடனக்குழுவினர் நடனமாடி அசத்தியுள்ளனர்.

 • Share this:
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், விஜய் யேசுதாஸ், ரோபோ சங்கர், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்கவே இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

  இந்நிலையில் ‘மாரி’ முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘தர லோக்கல்’ பிரிட்டன் ரியாலிட்டி ஷோவில் ஒலித்திருக்கிறது. மும்பையைச் சேர்ந்த x1x நடனக் குழுவினர் அதற்கேற்றாற்போல வித்தியாசமாக நடனமாடி அசத்தியிருக்கின்றனர். நடனக் குழுவின் திறமையைப் பார்த்த நடுவர்கள் வாயடைத்துப் போய் எழுந்து நின்று கைதட்டி பாராட்டியுள்ளனர்.

  இந்த வீடியோவை ‘மாரி’ பட இயக்குநர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடனக் குழுவை பாராட்டியிருக்கிறார். பிரிட்டனில் நடைபெற்ற ‘காட் லேண்ட்’ என்ற நடன நிகழ்ச்சியில் தனுஷின் ‘மாரி’ பட பாடல் ஒலித்திருப்பது அவரது ரசிகர்களிடையே கவனம் பெற்றிருப்பதோடு, சமூகவலைதளத்திலும் வைரலாகி வருகிறது.  ‘தர லோக்கல்’ பாடலை தனுஷ் எழுதி பாடியிருப்பார். அவருடன் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடல் இன்று வரை தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடலாக இருந்து வருகிறது.
  Published by:Sheik Hanifah
  First published: