’அஸ்தி’ குறும்பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்

news18
Updated: May 17, 2018, 4:13 PM IST
’அஸ்தி’ குறும்பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்
அஸ்தி குறும்பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்
news18
Updated: May 17, 2018, 4:13 PM IST
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ள நடிகர் தனுஷ் அஸ்தி குறும்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடித்திருக்கும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ பிரான்ஸில் நடைபெற்றுவரும் 71-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களில் இடம்பெற்றுள்ளது. இதற்காக தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளார்.

‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ படத்தை தமிழில் ‘வாழ்க்கையை தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் வெளியிட முயற்சித்து வரும் தனுஷ் அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அங்கேயே வெளியிட்டுள்ளார். மேலும் அங்கு நடந்த ரெட் கார்பெட் நிகழ்வில் தனுஷ் தனது படக்குழுவினருடன் அணிவகுத்தார்.மேலும் கான் விழாவிற்கு சென்ற தனுஷ் அஸ்தி என்ற குறும்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். தினகர் ராவ் இயக்கியுள்ள இந்த குறும்படத்தில் அந்தாராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அம்மா, மகளுக்கு இடையே உள்ள உறவு பற்றிய 14 நிமிட குறும்படமாக அஸ்தி உருவாகியிருக்கிறது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...