தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் பட ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு!

தனுஷ்

 • Share this:
  தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

  பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கி வருகிறார் கார்த்தி சுப்புராஜ். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ஆகவே டி40 என்றே குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

  லண்டன் மற்றும் மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், கடைசி 3 நாட்களுக்கான ஷூட்டிங்கை 6-ம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. அதோடு டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 9-ம் தேதி வெளியிடப்படும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  முன்னதாக இந்தப் படத்துக்கு சுருளி என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை படக்குழுவினர் மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  மேலும் பார்க்க: பட்டு வேட்டி சட்டையில் சிம்பு...! மஹத் திருமண புகைப்படங்கள்

  Published by:Sheik Hanifah
  First published: