Home » News » Entertainment » DHANUSH KARTHICK NAREN D43 MOVIE FIRST SONG SHOOTING COMPLETED SCS

முதல் பாடலை நிறைவு செய்த டி43 குழு

சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

முதல் பாடலை நிறைவு செய்த டி43 குழு
ஜானி மாஸ்டருடன் தனுஷ்
  • Share this:
தனுஷ் நடிக்கும் 43-வது படத்தின் பாடல் படபிடிப்பு நிறைவடைந்து விட்டதாக, நடன இயக்குநர் ஜானி தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் பிப்ரவரியில் வெளியாகும் எனத் தெரிகிறது. தவிர மாரி செல்வராஜின் ‘கர்ணன்’, இந்தியில் ‘அத்ரங்கி ரே’ ஆகியப் படங்களிலும் பிஸியாக இருக்கிறார் தனுஷ். இதனையடுத்து துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேனின் அடுத்தப் படத்தில் நடிக்கிறார். அடுத்ததாக தனுஷின் 43-வது படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ’மாஸ்டர்’ மாளவிகா மோகனன் நடிக்கிறார். அதோடு ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். அதேபோல் பிரபல பாடலாசிரியர் விவேக் இப்படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை டி-43 எனக் குறிப்பிட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் தற்போது படத்தில் இடம்பெறும் முதல் பாடலின் படபிடிப்பு முடிந்துவிட்டதாக நடன இயக்குநர் ஜானி, தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். படபிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே அப்டேட்டா என ஆனந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள்!



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 12, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading