தனுஷ் ரசிகர்களுக்கு ‘கர்ணன்’ டீமின் சர்ப்ரைஸ் அப்டேட்!

நடிகர் தனுஷ்

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.

  • Share this:
    தனுஷ் ரசிகர்களுக்கு ’கர்ணன்’ படக் குழுவினர் ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர் தனுஷ் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் ’நானே வருவேன்’ உள்ளிட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    தனுஷின் 41-வது படமான கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். தாணு தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளர்.



    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஒரு மாஸான போஸ்டருடன், வருகின்ற 31-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு, ’கர்ணன்’ திரைப்படம் குறித்த ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இது டீசர் குறித்தா அல்லது ரிலீஸ் தேதி குறித்தா என தனுஷ் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: