இது புதுசு... மிரட்ட வரும் புதிய கூட்டணி - தனுஷ் நடிக்கும் 43-வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் இயக்குனராக கார்த்திக் நரேன் அறிவிக்கப்பட்டுள்ளார். துருவங்கள் 16 மற்றும் மாபியா ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் தனுஷின் நாற்பத்தி மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். மேலும் படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்றுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 • Share this:
  தனுஷ் நடிக்கும் 43-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.

  இதையடுத்து அருண் விஜய்யை நாயகனாக வைத்து மாஃபியா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் கார்த்திக் நரேன். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் 21-ம் தேதி திரைக்கு வருகிறது.

  இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தனுஷின் 43-வது படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். இதன் மூலம் பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் வரிசையில் 5-வது முறையாக ஜி.வி.பிரகாஷ் தனுஷ் - கூட்டணி இணைந்துள்ளது.  மேலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவத்தை படமாக்கும் இயக்குநர்!

  பார்க்க: ரசிகர்களை வசியம் செய்யும் நடிகை ஷாலு ஷம்மு!

  Published by:Sheik Hanifah
  First published: