ஒரே நாளில் தியேட்டரிலும் ஓடிடி-யிலும் வெளியாகும் ’ஜகமே தந்திரம்’?

தனுஷ்

தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் படத்தை OTT-ல் நேரடியாக வெளியிடும் முடிவை மறுத்தனர்.

 • Share this:
  கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனுஷின் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று அதனை தள்ளிப் போகச் செய்திருக்கிறது.

  சமீபத்திய அறிக்கையின்படி, தனுஷின் 'ஜகமே தந்திரம்' ஒரே நாளில் திரையரங்குகளிலும், OTT-யிலும் வெளியாகும் எனத் தெரிகிறது. முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக ரசிகர்களுக்கு உறுதியளித்த 'ஜகமே தந்திரம்' தயாரிப்பாளர், மனம் மாறி, படத்தை OTT தளத்துக்கு விற்றதாக கூறப்படுகிறது.

  நடிகரின் தம்பியை ஹீரோவாக்கும் முயற்சியில் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்

  மறுபுறம், தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் படத்தை OTT-ல் நேரடியாக வெளியிடும் முடிவை மறுத்தனர். ஏனெனில் இந்தப் படம் ரசிகர்கள் பெரிய திரைகளில் ரசிக்கும்படி இயக்கப்பட்டுள்ளது. எனவே, தயாரிப்பாளர் இந்த படத்தை ஒரே நாளில் இந்தியாவின் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம். ஏனெனில் அரசாங்கம் சமீபத்தில் 100% ஆக்கிரமிப்பை அனுமதித்தது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்தும் திரையரங்கு உரிமையாளர்களைப் பொறுத்தே செயல் வடிவம் பெறும்.

  முன்னதாக, சிம்புவின் 'ஈஸ்வரன்' படத்டை முதல் வாரத்திற்குப் பிறகு, ஓடிடி-யில் வெளியிட திட்டமிடப்பட்டதால், அதனை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் இந்த முடிவு தலைகீழானது.இதேபோல், விஜய்யின் 'மாஸ்டர்' OTT-ல் வெளியிடப்பட்டு, தியேட்டரிலும் கூட்டம் கூடுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: