• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காதலர் தின ஸ்பெஷலாக தனுஷின் ’ஜகமே தந்திரம்!’

காதலர் தின ஸ்பெஷலாக தனுஷின் ’ஜகமே தந்திரம்!’

தனுஷ்

தனுஷ்

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒய்நாட் ஸ்டுடியோஸ் 'ஜகமே தந்திரம்’ படத்தை தயாரித்துள்ளது.

  • Share this:
    தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் காதலர் தினத்தையொட்டி, பிப்ரவரி 12-ம் தேதி வெளியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விஜய்யின் ’மாஸ்டர்’, சிம்புவின் 'ஈஸ்வரன்' ஆகியப் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகும் நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய தனுஷின் 40-வது படமான 'ஜகமே தந்திரம்' வெளியீடு குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் முன்னதாக 2020 மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

    ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒய்நாட் ஸ்டுடியோஸ் 'ஜகமே தந்திரம்’ படத்தை தயாரித்துள்ளது. படத்தில் தனுஷ் ஒரு மதுரை கேங்க்ஸ்டராக நடிக்கிறார். ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பிரேவ்ஹார்ட், டிராய், தி க்ரோனிகல்ஸ் ஆஃப் நார்னியா: தி லயன், மற்றும் கேம் ஆப் த்ரோன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்த ஹாலிவுட் நட்சத்திரம் ஜேம்ஸ் காஸ்மோ, இந்தப் படத்தின் மூலம் இந்திய திரையுலகில் அறிமுகமாகிறார்.

    சில படங்களைப் போல ’ஜகமே தந்திரம்’ படமும் OTT தளத்தில் வெளியிடப்படும் என்று பேச்சுகள் எழுந்த போது, வதந்திகளை புறம் தள்ளி, இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என உறுதியளித்தார் தயாரிப்பாளர் சசிகாந்த். இந்நிலையில் தனுஷின் 'ஜகமே தந்திரம்' 2021 பிப்ரவரி 12-ஆம் தேதி, காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறதாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: