ஓடிடி-யில் வெளியாகிறதா தனுஷின் ஜகமே தந்திரம்?

தனுஷ்

முன்னதாக கடந்த ஆண்டு, 'ஜகமே தந்திரம்' OTT தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியானது.

 • Share this:
  தனுஷ் நடித்திருக்கும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் தியேட்டரில் வெளியாகுமா? இல்லை ஓடிடி-யில் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

  தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களாக சூர்யாவின் 'சூரரைப்போற்று' மற்றும் விஜய்யின் 'மாஸ்டர்' ஆகியவை இருந்தது. இதில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று படம், பிரபல OTT தளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, பின்னர் ஓடிடி-யிலும் வெளியானது. இதைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய தனுஷின் 'ஜகமே தந்திரம்' மற்றொரு பெரிய நட்சத்திரத்தின் படமாக உள்ளது.

  முன்னதாக கடந்த ஆண்டு, 'ஜகமே தந்திரம்' OTT தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியானது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் இதனை மறுத்தார். இந்நிலையில் இந்தப் படம், 2021 பிப்ரவரி 12 ஆம் தேதி காதலர் தினத்திற்கு முன்னதாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பிரபல OTT தளத்தில் ஜகமே தந்திரம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

  கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் என்ற அதிரடி திரில்லர் படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப்படம் முன்னதாக 2020 மே 1 ஆம் தேதி திரைக்கு வர திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக இதன் வெளியீடு தள்ளிப் போனது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: