அடுத்த ட்ரெண்டிங் பாடல் ரெடி... தீவிர நடன பயிற்சியில் தனுஷ்!

தனுஷ்

டி43 என அழைக்கப்படும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

 • Share this:
  கார்த்திக் நரேனின் அடுத்தப் படத்திற்காக தனுஷ் தீவிர நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பம்பரமாய் சுழன்று வருகிறார் நடிகர் தனுஷ். தற்போது கார்த்திக் சுப்புராஜின் ’ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜின் ’கர்ணன்’, ஆனந்த் எல் ராயின் ’அத்ரங்கி ரே’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக ’துருவங்கள் பதினாறு’ பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.  டி43 என அழைக்கப்படும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்.

  இந்நிலையில் டி43 படத்துக்காக தனுஷ் தீவிர நடனப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் படத்தை நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ’தனுஷ் சாரின் இன்னொரு டிரெண்டிங் பாடல் வந்துக் கொண்டிருக்கிறது’ என அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: