ஹாலிவுட் பட ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா பறக்கும் தனுஷ்

தனுஷ்

படப்பிடிப்புக்காக நடிகர் தனுஷ் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரமாண்ட தயாரிப்பாக தி க்ரே மேன் என்கிற திரைப்படம் உருவாகிறது. ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தி க்ரே மேன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்க வேண்டிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வரும் பிப்ரவரி 9-ம் தேதி ‘தி க்ரே மேன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனுஷ் அமெரிக்க செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தனுஷ் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் பிப்ரவரி 8-ம் தேதி வரை படமாக்கப்பட இருப்பதாகவும் அதன் பின்னரே அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அக்‌ஷய்குமார் உடன் தனுஷ் நடித்த ‘அத்ரங்கி ரே’ பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க: திருமண நிச்சயதார்த்த வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை

தமிழில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜகமே தந்திரம் திரைப்படத்தையும் திரையரங்கில் காணவே தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Published by:Sheik Hanifah
First published: