’தி க்ரே மேன்’படத்தில் நடிக்க ஆவலாக உள்ளது : தனுஷ் ட்வீட்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படமான ‘தி க்ரே மேன்’படத்தில் நடிக்க ஆவலாக உள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படமான ‘தி க்ரே மேன்’படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவுள்ளது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களை கட்டிப்போட்ட அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ‘தி க்ரே மேன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

  மேலும் பிரபல ஹாலிவுட் ஹீரோக்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் தனுஷை கொண்டாடி வருகின்றனர்.

  இந்நிலையில் தனுஷ் தான் ஹாலிவுட் படத்தில் நடிக்கபோவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ‘ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கவிருக்கும் ’தி க்ரே மேன்’ படத்தில் இணைவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.ஆக்‌ஷன் நிறைந்த இந்த படத்தில் இணைந்து வேலை செய்ய ஆவலாக இருக்கிறேன்.இத்தனை ஆண்டுகளாக எனக்கு அன்பும்,ஆதரவும் தந்த உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

  தனுஷின் இந்த பதிவிற்கு வா தலைவா வா, ஆஸ்கார் விருது தூரம் இல்லை அசுரனே, நீங்க வேற லெவல் என கமெண்ட்களை ரசிகர்கள் அள்ளி வீசி வருகின்றனர்.   

  மேலும் தனஷ் தற்போது ’அட்ராங்கி ரே’ என்ற ஹிந்தி படத்தில் சாரா அலிகான், அக்‌ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: