• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழிசை சவுந்தரராஜன் வீரத் தமிழச்சி - தனுஷ் தந்தை புகழாரம்!

தமிழிசை சவுந்தரராஜன் வீரத் தமிழச்சி - தனுஷ் தந்தை புகழாரம்!

தமிழிசை சவிந்தரராஜன்

தமிழிசை சவிந்தரராஜன்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழிசை சவுந்தரராஜன் வீரத் தமிழச்சி என்றும் தங்க தமிழச்சி என்றும் இயக்குநரும் நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

    சென்னை லட்சுமிபுரத்தில் உள்ள பத்மஸ்ரீ சேஷ மஹாலில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா, திரைப்பட நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கஸ்தூரி ராஜா பேசுகையில், “இந்தியா என்பது என் தேசம். இந்தியன் என்பது என் பெயர். இந்து என்பது என் அடையாளம். நம்முடனே இருந்த, மிக எளிமையானவர் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டது தமிழர்களின் பெருமையாகும். அமைதியான புயல் இங்கே இருந்து புலம்பெயர்ந்து தெலங்கானா சென்று விட்டது.

    தமிழனுக்கு முக்கியமானது போர் குணம். தமிழிசை சவுந்தரராஜன் வீரத் தமிழச்சி தங்க தமிழச்சி. இந்தியன் என்கின்ற வார்த்தைக்குள் தமிழனும் இருக்கிறான். தமிழிசை சவுந்தரராஜன் தமிழின் பெருமையை நிலை நாட்டுவார்” என்றார்.



    வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், பல கஷ்டங்களை தாண்டி ஒரு பெண்ணாக ஆளுநராக வெற்றி பெற்றிருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். மற்றவர்களுடைய விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு தமிழிசை சௌந்தரராஜன் சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.

    இதையடுத்து பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், “வரலட்சுமியும் நானும் ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறோம் என்றால் எங்கள் எண்ணம் ஒன்றாக இருப்பதால் தான். வரலட்சுமி எனக்கு சானிட்டரி நாப்கின் மெஷின் பரிசாக அளித்தார். முதல் முதலாக நான் சி.எஸ்.ஆர் அரசு அதிகாரியாக இருக்கும் பொழுது என்னிடம் முதலில் நீங்கள் எதை செய்ய விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பெண்கள் பள்ளியில் சானிடரி நாப்கின் வைக்க வேண்டும் என கூறினேன்” என்றார்.

    மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் வழங்கியதைப் பாராட்டி பேசிய தமிழிசை, இன்றைய சூழ்நிலையில் மாணவ மாணவியர்கள் தான் வாழ்வில் நிஜ கதாநாயகர்கள் எனவும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் வரலாற்று கதைகளை சொல்லி அசத்தினார்.

    ஸ்ரீ அர்ச்சனா தேவி என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு ஆட்டோ, துணி தையல் இயந்திரம், அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் குழந்தைகளுக்கு புத்தக பை போன்ற பொருட்கள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: