ஜகமே தந்திரம் படத்தை ஓடிடி-யில் வெளியிட தனுஷ் ரசிகர்கள் எதிர்ப்பு

தனுஷின் ஜகமே தந்திரம்

'ஜகமே தந்திரம்’ படத்தை ஓடிடி-யில் வெளியிட வேண்டாம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள்.

 • Share this:
  நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தை OTT தளத்தில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து ஆவடியில் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

  கொரோனா ஊரடங்கு சமயத்தில் பலரும் வீட்டில் முடங்கியதால் திரைப்படங்களை ஓடிடி-யில் வெளியிடும் சூழல் உருவானது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நடிகர் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

  இதனை தொடர்ந்து இணையத்தில் வெளியாவதாகக் கூறப்பட்ட, விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் படம் முதலில் திரையரங்கில் வெளியாகி, பின்னர் ஓடிடி-யில் வெளியானது.

  “ஆய்வுக்கு உட்படுத்தப்படும் சித்ராவின் நகங்கள்” – வழக்கு 11-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

  இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நடித்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் ’ஜகமே தந்திரம்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் படத்தை ஓடிடி-யில் வெளியிட வேண்டாம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ’ஜகமே தந்திரம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’ என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: