வட சென்னை-2 கைவிடப்பட்டதா? ரசிகர்களுக்கு தனுஷ் விளக்கம்

வட சென்னை வெளியான பிறகு, வட சென்னை-2 படத்துக்கான படப் பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தனுஷ், வெற்றி மாறன் இணைந்து அசுரன் என்ற படத்தில் இணைந்துள்ளனர்.

news18
Updated: July 15, 2019, 7:35 PM IST
வட சென்னை-2 கைவிடப்பட்டதா? ரசிகர்களுக்கு தனுஷ் விளக்கம்
நடிகர் தனுஷ்
news18
Updated: July 15, 2019, 7:35 PM IST
வட சென்னை-2 திரைப்படம் குறித்து வரும் வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம் வெற்றியைத் தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த படம் வட சென்னை. இந்தப் படத்தின் இரண்டு பாகமாக வெளியாகும் என்று படத்தின் தொடக்கத்தின் போதே அறிவிக்கப்பட்டிருந்தது.

வட சென்னை வெளியான பிறகு, வட சென்னை-2 படத்துக்கான படப் பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தனுஷ், வெற்றி மாறன் இணைந்து அசுரன் என்ற படத்தில் இணைந்துள்ளனர். இதனையடுத்து, வடசென்னை-2 கைவிடப்பட்டது என்று தகவல்கள் கசிந்தன. சமீபத்தில் வட சென்னை-2 கைவிடப்பட்டது என்று செய்திகள் வலம் வந்தன.
Loading...இதுகுறித்து விளக்கமளித்த தனுஷின் ட்விட்டர் பதிவில், ‘என்னுடைய ரசிகர்களுக்கு ஏற்பட்ட குழப்பதுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. வடசென்னை இரண்டாம் பாகம் கவனத்தில் உள்ளது. என்னுடைய படம் தொடர்பாக, என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வரும் வரையில் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: July 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...