Home /News /entertainment /

ஒரு வழியாக ரிலீசுக்கு தயாரான எனை நோக்கி பாயும் தோட்டா!

ஒரு வழியாக ரிலீசுக்கு தயாரான எனை நோக்கி பாயும் தோட்டா!

தனுஷ்

தனுஷ்

தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்திலும், கொடி இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார் தனுஷ்

  • News18
  • Last Updated :
    தனுஷ் நடிப்பில் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்ட திரைப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் ரீலிசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தனுஷ் முதன் முறையாக கெளதம் வாசுதேவ் மேனனுடன் கூட்டணி அமைத்த படம் ‘எனை நோக்கு பாயும் தோட்டா’. தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

    இயக்குநர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்து வருகிறது.

    கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீசாகாமல் தள்ளி வைக்கப்பட்டது.

    தற்போது படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு யு/எ சான்றிதழ் கிடைத்துள்ளது





    தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்திலும், கொடி இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார் தனுஷ்.



    இந்நிலையில் தனுஷின் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Also watch

    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Dhanush

    அடுத்த செய்தி