Home /News /entertainment /

தனுஷுக்கு வில்லனாகும் ஹீரோ நடிகர்?

தனுஷுக்கு வில்லனாகும் ஹீரோ நடிகர்?

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

அசுரன், துரை செந்தில்குமார் படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார்

  • News18
  • Last Updated :
    துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் வில்லன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ், துரை செந்தில்குமார் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.



    வெற்றிமாறன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகிறார். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் தந்தை, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கிடைத்த தகவலின்படி இந்தப் படத்தில் 2014-ம் ஆண்டு வெளியான ‘சரபம்’ படத்தின் ஹீரோ நவீன் சந்திரா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    அசுரன், துரை செந்தில்குமார் படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    நடிகை ஸ்ரீரெட்டி விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் ரிலீஸ்

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor dhanush, Director vetrimaran

    அடுத்த செய்தி