D43 டைட்டிலை முடிவு செய்துவிட்டோம்... விரைவில் அறிவிக்கப்படும் - நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

D43 படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படம் டி43. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தனுஷின் 43 வது படம் என்பதால் டி43 என்று கூறி வருகின்றனர். இந்த படத்தில் பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். 

    இந்த படத்தில் சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பின் முதல் நாளில் ஒப்பனிங் சாங் படமாக்கப்பட்டுள்ளது. டி43 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன், தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் கதாநாயகி மாளவிகா மோகனன் அனைவரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.

    இதனை பார்த்து உற்சாகமடைந்த தனுஷ் ரசிகர்களுக்கு இன்னும் உற்சாகம் சேர்க்கும் வகையில் மற்றொரு அறிவிப்பை தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார். தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நாங்கள் இப்போது தான் டி43 படத்தின் டைட்டிலை முடிவு செய்தோம், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.


    இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் வைட்டிங்,தலைவா என பல கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Tamilmalar Natarajan
    First published: